மக்கள் முன்னிலையில் பெண் ஒருவருக்கு இராணுவ சிப்பாய் செய்த கொடூரம்! கொழும்பி்ல் சம்பவம்

கொழும்பு, அங்கொடை சந்தியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்தவராகும். சந்தேக நபர் 46 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கடுமையாக போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் தான் திருமணம் செய்த கணவனை பிரிவு அங்கொடை சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருக்கு, குறித்த பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவர் பணியாற்றும வர்த்தக நிலையத்திற்கு பல முறை சென்று அவரிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் அந்த யோசனையை குறித்த பெண் நிராகரித்துள்ளார்.

சந்தேக நபரை கடுமையாக திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது யோசனையை நிராகரிப்பதற்காக கோபமடைந்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் அங்கொடை சந்தியில் பணியிடத்திற்கு அருகில் சென்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கத்தியால் குத்தியுள்ளார்.

பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி செல்லும் போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.