2021ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி

2021ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL2021) கிரிக்கெட் போட்டிகளுக்கு குறிப்பிட்டளவு ரசிகர்களை அனுமதிக்க சுகாதார தரப்பு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள 2021ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL2021) கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட கடுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுக்கு கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர்  பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.