யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று இரவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவர்க்கு நேர்ந்த சோகம்

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று இரவு, துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை டிப்பர் வாகனம் ஒன்று மோடியதில் முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியரவர் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  படுகாயமடைந்தவர் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி குணராசா என கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.