இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நான்கு புதிய விமான நிறுவனங்கள்

நான்கு புதிய விமான நிறுவனங்கள் டிசம்பரில் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ரஷ்யாவின் AZUR விமான சேவையானது டிசம்பர் 3 ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கஸகஸ்தானில் இருந்து AIR ASTANA விமான சேவை அன்றைய தினத்தில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் பொலாந்து LOT POLISH விமான நிறுவனம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இத்தாலியில் இருந்து NEOS விமான சேவை அடுத்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.

 

கடந்த சில நாட்களாக AEROFLOT, AIR FRANCE உட்பட நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளன.

இலங்கைக்கு நேரடி விமான சேவையுடன் கூடிய புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்ப உதவும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.