கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றவர்க்கு நேர்ந்த துயரம்

கிளிநொச்சி பூநகரி – கௌதாரிமுனை கடற்கரையில் சடலமொன்று மீட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் பாசையூரை சேர்ந்த காணாமல்போன மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர் கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த பாசையூரை சேர்ந்த மீனவர் என தொியவந்துள்ளது.

இதேவேளை யாழ்.மண்டைதீவு – பூவரசந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் வருவதை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த மீனவர் காணாமல்போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பூவரசந்தீவின் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் பதுங்கியிருந்துள்ளனர்.