அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்! 31 வயது சந்தேக நபர் தலைமறைவு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஒரு பிள்ளையின்  தந்தை தலைமறைவாகியுள்ளார்.

அதோடு சம்பவம் தொடர்பில் சிறுமியின் சகோதரி மற்றும் தாயாரை, நேற்று கைது செய்துள்ளதாக திருக்கோவில்பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தெரிவித்தார்.

இந்நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவனான 31 வயது சந்தேக நபரே தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதோடு தலைமறைவாகிய நபரை தேடி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயது தாயார் மற்றும் சிறுமியின் 24 வயது சகோதரி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக பொலிஸர் வழக்குத் தாக்குதல் செய்துள்ளனர்.