மீண்டும் திறக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையம்…சமூக இடைவெளியையும் மீறி அலைமோதிய மக்கள் கூட்டம்..!!யாழில் காத்திருக்கும் பேராபத்து…!!

இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இன்று காலை 11 மணி தொடக்கம் மதுபான விற்பனை நிலையங்கள் நாடு முழுவதிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளிவந்தவுடன் யாழ் நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் மதுவாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.நாட்டில் கொரோனா ஓளரவு கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமைக்கு பொதுமக்கள் ஏற்கனவே தமது அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் இன்று யாழ் நகரில் கட்டுங்கடங்காத வகையில் மதுப்பிரியர்கள் கூட்டமாக நின்று மதுவாங்குவதை எம்மால் காணக்காடியதாகவிருந்தது.மதுபான விற்பனை நிலையங்கள் நீண்ட நாட்களின் பின் இன்று திறக்கப்பட்டதனால் குடிப்பதற்கு பெரும் தாகத்துடன் காத்திருந்த இளைஞர்களும் முதியவர்களும் சமூக இடைவெளி கட்டுப்பாட்டுகளையும் மீறி அலைமோதுவது யாழில் கொரோனா மீண்டும் பெருகிட வழி வகுக்குமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.