காலைவேளையில் பொருட்களை வாங்க வரிசையில் நின்ற நபருக்கு நேர்ந்த சோகம்…!!

மாத்தறை – தெனியாய, கொட்டப்பொல பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்க வந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது 09.35 மணியளவில் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நின்றனர்.இதன் போது கொஸ்நில்கொட பொலிஸார் வரிசையில் நெறிசலாக நின்றவர்களை ஒழுங்குபடுத்தி பெரியவர்களை முதலாவதாக வாங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.இதன் போது பின்னால் துவிச்சக்கர வண்டியில் வந்து நின்ற ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் அவரை உடனடியாக முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க முற்பட்ட போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதில் உயிரிழந்தவர் மாகாஹேன கல்தொல என்ற இடத்தை சேர்ந்த (69) வயதுடைய ஆர். அமரதாச என்பவராவார்.இவரது சடலம் மொறவக்க கொஸ்நில்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.