பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? வாங்க என்னவென்று பார்ப்போம்

காய்கறிகள் கனவில் வந்தால்

 1. வெங்காயத்தை உரிப்பது போல கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
 2. வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
 3. முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் உண்டாகும்.
 4. முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும் என்று அர்த்தம்.
 5. கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம் மேன்மை அடையும் என்று அர்த்தம்.
 6. கிழங்கு வகைகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நடப்பை அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்று பொருள்.
 7. அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 8. அவரை பூவை கனவில் கண்டாலும் நல்ல பலன்களே ஏற்படும்.
 9. அவரை கையை சாப்பிடுவது போல கனவு கண்டால் நோய்கள் ஏற்பட போகிறது என்று பொருள்.
 10. பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
 11. ஏலக்காயை கனவில் கண்டால் மற்றவர் மதிக்கும் வண்ணம் சம்பவங்கள் நடைபெறும்.
 12. ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் நிறைந்த செல்வம் சேரும் என்று அர்த்தம்.
 13. காய்கறிகளை பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
 14. காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் ஒருசிலரால் நம்பி ஏமாறும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
 15. காய்கறிகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள், அதலால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
 16. பச்சைப் பூசணிகாயை கனவில் கண்பது நோய் வருவதன் அறிகுறியாகும்.
 17.  மஞ்சள் பூசணிகாயை கனவு கண்டால் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
 18. புடலங்காய் தொங்குவது போல கனவு கண்டால் நம் உடல் நோய்வாய்பட போகிறது என்று அர்த்தம்
 19. கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.