18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு! கோடீஸ்வரர்களாக மாறப்போகும் ராசி இது தானாம்..!!

இந்த ராகு கேது பெயர்ச்சி சிலரை கோடீஸ்வரர்கள் ஆக மாற்றப் போகிறது.ராகு கேது பெயர்ச்சி சார்வரி தமிழ்ப் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் திகதி செப்டம்பர் 1ஆம் திகதி வாக்கியப்பஞ்சாங்கப்படி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் திகதிநிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜென்ம ராகுவாக ரிஷபத்தில் அமரப்போகிறார்.அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்ந்து ஜென்ம கேதுவாக அமரப்போகிறார். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது.அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டோமே இப்போது ஜென்ம ராகு வருதே என்று ரிஷப ராசிக்காரர்கள் கலங்க வேண்டாம்.அதே போல ஏழரை சனியால் சங்கப்பட்ட நமக்கு ஜென்ம கேது வரப்போகுதே என்று சங்கடம் வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்று எதையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.ராகு கேது பலன்கள்:நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் பலம் பெற்றவர்கள்.ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது. இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள்.ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால், கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுக்கப் போகின்றனர்.ரிஷபம்:இந்த ஆண்டு ரிஷப ராசியில் அமரப்போகும் ராகு ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் வைத்திருக்கும். சும்மாவே கொரோனா பீதியில் பலருக்கு வேலையும் இல்லை சம்பளமும் இல்லை இதில் ராகு தலைமேல் ஜென்ம ராகுவாக அமர்வது நடுங்க வைக்கப் போகிறது.18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு ஜென்ம ராகுவாக ரிஷப ராசிக்கு வருகிறார். கவனமாக இருங்கள் பயப்பட வேண்டாம். புதிதாக செய்யப் போகும் தொழில் முதலீடுகளில் கவனமாக இருங்கள்.உங்க வாழ்க்கையில் நீங்க சந்திக்கப் போகும் புதிய நபர்களிடம் கவனமாக இருங்கள் புதிய நபர்களை நம்பி எந்த பொறுப்புக்களையும் ஒப்படைக்க வேண்டாம். பாதிப்புகள் நீங்க ராகு காலத்தில் ராகுவுக்கு அதி தேவதை, துர்க்கை, காளியை வழிபடுங்க. பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.மிதுனம்:தெருக்கோடியில் இருப்பவரையும் பல கோடிக்கு அதிபராக ஆக்குபவர் ராகுதான். கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபம் ராசிக்கு போகிறார். மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தாலும் மிதுனம் ராசிக்கு அபரிமிதமான அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும் விசா பிரச்சினைகள் தீரும். 12 ஆம் வீடு வெளிநாடு செல்லும் யோகத்தை தரும்.மிதுனம் ராசி மிதுனம் லக்னக்காரர்களுக்கு இந்த கொரோனா பிரச்சினை முடிந்த உடன் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.அஷ்டமத்து சனியால் ரொம்ப கஷ்டமாக இருக்கே. அதுவும் கொரோனா காலத்தில் வேலை போய் உணவுக்கே கஷ்டப்பட்டு பிரச்சினையை தருகிறதே என்று யோசிக்கலாம். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பின்னர் செப்டம்பர் மாதம் முதல் சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல காலம். வர்த்கம் ஆரம்பிக்கலாம்.சின்னதாக ஆரம்பிக்கும் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது-செப்டம்பர் மாதம் முதல் உங்களின் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபத்தை தரப்போகிறது. வேலை செய்யிறவங்களுக்கு வேலை இல்லாம போச்சே என்று கவலைப்படாதீங்க. நீங்கள் புதுசாக வியாபாரம் ஆரம்பியுங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்து நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் வீட்டினை தேடி அதிர்ஷ்ட லட்சுமி தேடி வருவார்.  இந்த கொரோனா காலமெல்லாம் முடியட்டும். வெளிநாடு போகும் யோகம் வந்தால், நீங்கள் அதிஷ்ட ரேஸ் மூலமாக உங்களுக்கு திடீர் பணவரவு வரும். சந்தோஷமாக அனுபவியுங்கள்.