ஆறிப்போன தண்ணீரை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதால் இத்தனை ஆபத்தா? வாங்க என்னவென்று பார்க்கலாம்

மழை காலம் மட்டும் இல்லாமல் எந்த காலமாக இருந்தாலும் தண்ணீரை நன்கு சூடுபடுத்தி குடிப்பது உடல் ஆரோக்கியத்திட்கு மிகவும் நல்லது. சூடாக குடிக்காவிட்டாலும் வெது வெதுப்பான பதத்தில் தண்ணீரை குடிப்பதும் உடலிற்கு நல்லது.

ஆனால் நாம் சூடுபடுத்திய தண்ணீர் குளிர்ந்த பிறகு அதை மீண்டும் கொதிக்க வைத்து அல்லது சூடுபடுத்தி குடிப்பது நல்லதா என்பது பலருக்கு ஒரு வித குழப்பமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த தகவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

  • தண்ணீரில் உள்ள கிருமிகள் நாம் முதல்முறை கொதிக்க வைக்கும் பொழுதே இறந்து விடும். ஆகையால் அவற்றை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை. தண்ணீரை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் மோசமானது.
  • காய்ச்சிய நீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினாலும் அது சில சமயங்களில் விஷமாகவே மாறிவிடும். தண்ணீரில் சேகரிக்கப்படுகின்ற கால்சியம் உப்புகள் பித்தப்பை கற்களையும் சிறுநீரகக் கற்களையும் ஏற்படுத்துகின்றன.
    • தண்ணீரில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரோசைமன்களாக மாறி கார்சினோஜெனிக் என்னும் ஒருவகை விஷப்பொருளாக மாறிவிடுகின்றன. அதில் உள்ள நச்சுக்கள் புற்றுநோய், இதய நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

    • மினரல் வாட்டரை சுத்திகரிக்கும் பொழுது அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் வெளியேறிவிடும். அதைத் தவிர மற்ற எந்தவித சத்துக்களும் வெளியேறாது. அதனால் சாதாரண நீரை சுட வைப்பது போன்றே இந்த நீரையும் சுட வைக்கலாம்.