முகம், கழுத்து போன்ற பகுதியில் காணப்படும் மருக்களை போக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக பலருக்கு மருக்கள் சாதாரணமாக வருவது உண்டு.

உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம் என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாக தென்படும்.

ஆண் களை விட பெண்களுக்கு அதிகம் மரு உண்டாகிறது. இது அழகையே கெடுத்து விடும்.

 

 

இதனை ஒரு சில பொருட்களை கொண்டு போக்க முடியும் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காட்டனை எடுத்து அதில் ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து மருக்கள் மீது தடவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • பூண்டை பேஸ்ட் செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்தால், சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும். உடனடி பலன் கிடைக்க பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவலாம்.
  • ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 3 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
  •  உருளைக்கிழங்கு சாற்றை இரவில் மருக்கள் மீது தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவி வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.
  • எலுமிச்சை சாற்றை எடுத்து காட்டனில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் மருக்கள் உதிர்ந்து விடும்.
  • பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெயை கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இதனை மருக்கள் மீது தடவி உலர விட்டு பின்னர் கழுவ வந்தால் விரைவில் மருக்கள் நீங்கிவிடும்.