வானிலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.