அடுத்து வரும் வாரங்கள் தீர்மானம் மிக்கவை..!கொழும்பு வாழ் மக்களின் பொறுப்பற்ற செயல் அம்பலத்திற்கு..!!

கொரோனா வைரஸிற்க்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதற்கமைய இந்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடரந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் செயற்பாடு திருப்தி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கண்டுபிடிக்கப்பதற்காக இன்று முதல் சிசிடீவி மற்றும் புலனாய்வுப் பிரிவு செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றதா என இன்று முதல் சோதனையிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.