திருமணம் உள்ளிட்ட அத்தியாவசியமான விழாக்களை நடத்த திட்டமிட்டிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருமணம் உள்ளிட்ட அத்தியாவசியமான விழாக்களை நடத்த திட்டமிட்டிருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.

திருமணம் மற்றும் அத்தியாவசியமான விழாக்கள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றிற்கு மிகக் குறைந்தளவிலான மக்களை ஒன்று திரட்டுமாறு  பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 16ஆம் திகதியில் இருந்து  நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான மீள் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களுக்கென பிரத்தியேகமான சுகாதார வழிகாட்டி இன்று  வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.