யாருமற்ற நேரத்தில் வீட்டில் தனியாகவிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்.!

இந்தியாவில் 8 மாதக் கர்ப்பிணி பெண் வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில் கொலையாளி அவரின் மைத்துனர் தான் எனத் தெரியவந்துள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.நேற்று வீட்டில் இவர் தனியாக இருந்த நிலையில், குடும்பத்தார் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜோதி இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.வீட்டின் சுவற்றிலும் இரத்தம் படிந்திருந்த நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் ஜோதி கணவரின் தம்பி ஹரி பாபுவுக்கும், ஜோதிக்கும் பல நாட்களாக பிரச்சனை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து ஹரியிடம் பொலிசார் விசாரித்த போதுஅண்ணியை கத்தியால் குத்திக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.மேலும், குடிக்கு அடிமையான ஹரி தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், அவரின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இந்த சூழலில் தான் அண்ணி ஜோதியிடம் அவர் வாக்குவாதம் செய்த நிலையில் அதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து ஹரியை பொலிசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.