பெரும் தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விசேட அதிரடிப்படையினறால் ஒருவர் கைது!

நாட்டில்  5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 60,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைதாவர்களிடம் இருந்து 900,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை மற்றும் கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 46 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது.

மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.