மன்னாரில் மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி காடையர்களால் உடைப்பு : இ.சாள்ஸ் நிர்மலநாதன் கண்டனம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி நேற்றிரவு இனம்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே புண்பட்டுள்ள தமிழர் மனங்களை மேலும் புண்படுத்தும் செயற்பாடாகவே இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

எம் இனத்திற்காக போராடி எமக்காக உயிர் நீத்த மறவர்கள் துயில்கொள்ளும் துயிலும் இல்லத்தின் இந்தத் தூபியினை உடைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.