புனித வெள்ளரசு மரத்தை ஜனாதிபதி வழிப்பட்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.

 

இதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதி புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள இடத்தில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, புனித போதி மரத்திற்கு பால் உணவை படைத்து வழிப்பட்டுள்ளார்.