ராகு கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது..?

ராகுவும் கேது ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் திகதி, செப்டம்பர் 1ஆம் திகதி வாக்கியப்பஞ்சாங்கப்படி நடைபெறப்போகிறது.திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தியதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜென்ம ராகுவாக ரிஷபத்தில் அமரப்போகிறார். அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்ந்து ஜென்ம கேதுவாக அமரப்போகிறார்.நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. தற்போது அந்த அதிர்ஷ்டகார ராசி எது என இங்கு பார்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் இந்த ஆண்டு அமரப்போகும் ராகு ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் வைத்திருக்கும். சும்மாவே கொரோனா பீதியில பலருக்கு வேலையும் இல்லை சம்பளமும் இல்லை இதில் ராகு தலைமேல் ஜென்ம ராகுவாக அமர்வது நடுங்க வைக்கப் போகிறது.18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு ஜென்ம ராகுவாக ரிஷப ராசிக்கு வருகிறார். கவனமாக இருங்க. பயப்பட வேண்டாம்.புதிதாக செய்யப் போகும் தொழில் முதலீடுகளில் கவனமாக இருங்க. உங்க வாழ்க்கையில் நீங்க சந்திக்கப் போகும் புதிய நபர்களிடம் கவனமாக இருங்கள்.புதிய நபர்களை நம்பி எந்த பொறுப்புக்களையும் ஒப்படைக்க வேண்டாம். பாதிப்புகள் நீங்க ராகு காலத்தில் ராகுவுக்கு அதி தேவதை, துர்க்கை, காளியை வழிபடுங்க. பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
தெருக்கோடியில் இருப்பவரையும் பல கோடிக்கு அதிபராக ஆக்குபவர் ராகுதான். கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபம் ராசிக்கு போகிறார்.மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தாலும் மிதுனம் ராசிக்கு அபரிமிதமான அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும் விசா பிரச்சினைகள் தீரும். 12 ஆம் வீடு வெளிநாடு செல்லும் யோகத்தை தரும்.மிதுனம் ராசி மிதுனம் லக்னக்காரர்களுக்கு இந்த கொரோனா பிரச்சினை முடிந்த உடன் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

கோடீஸ்வர யோகம் யாருக்கு?
ராகு கேது பெயர்ச்சிக்கு பின்னர் செப்டம்பர் மாதம் முதல் சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல காலம்.பிசினஸ் ஆரம்பிக்கலாம் சின்னதாக ஆரம்பிக்கும் பிசினஸ் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.செப்டம்பர் மாதம் முதல் உங்களின் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபத்தை தரப்போகிறது.வேலை செய்பவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப்பட தேவையில்லை, புதிய பிசினஸ் ஆரம்பித்து உங்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்து உங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.உங்கள் வீட்டினை தேடி அதிர்ஷ் லட்சுமி தேடி வரும். வெளிநாடு போகும் யோகம் வந்தால் நீங்கள் லொட்டரி, ரேஸ் மூலமாக உங்களுக்கு திடீர் பணவரவு வரும். சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்..