சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று…!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் மொத்தமாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இதற்கு முன்னர் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று தற்போதுவரை கண்டறியப்பட்ட 10 பேரில் 9 பேர் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மற்றைய ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.