எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் சர்வதேச நாடுகளில் பரவியுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக டிசம்பர் மாதத்தில் கடுமையான கோவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றின் தாக்கத்தினால், பல நாடுகளில் உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், இதனால் இலங்கை போன்ற நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியாக உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே பொருட்களின் விலை குறைவடையும். டிசம்பர் மாதம் அளவில் உற்பத்தி தடைப்பட்டால் பொருட்களில் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனாலேயே ஜனாதிபதி பல பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.