டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

 

சாதாரணமாக நாளொன்றில் 5 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் 25 இற்கும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டெங்குப் பரவல் தொடர்பாக பெற்றோரை அதிக கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.