கொரோனா வைரஸ் தொற்று..யாழ் நீதிமன்றில் நடைபெறவிருந்த வழக்கு திகதிகளில் மாற்றம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்குகள் சில பிற்போடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரையான நாட்களில் நடைபெறவிருந்த விளக்கமறியல் வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்குகள் பின்வரும் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தற்போது வரையில் 142 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.