பொடுகு பிரச்சினையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ் – வாங்க பார்க்கலாம்

இன்றைய காலத்தில் பெரும்பாலோனர் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள் ஆகும்.

இவற்றை ஆரம்பத்திலே கவனத்து சரி செய்வது கொள்வது நல்லது. தற்போது பொடுகை விரட்ட உதவும் சில இயற்கை வழிகள் தற்போது பார்ப்போம்.

  • வேப்ப இலைகளை அரைத்து பேஸ்ட் ஆக்கி தயிர் கலந்து உச்சந்தலை முழுவதும் தடவி எடுக்கவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். தயிர் வேப்பிலை இரண்டுமே பூஞ்சை எதிர்ப்பு போராட்டத்தில் சிறப்பான அதிசயங்களை செய்யும்.
  • இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை சிறிய பாத்திரத்தில் விட்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இதை கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து வேப்பம்பூ சோப்பு கொண்டு தலையை அலசி எடுக்கவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் புரதம் மற்றும் பொடுகு விரைவில் மறைந்துவிடும்.
  • தண்ணீரில் நெல்லிக்காய் பொடியை பேஸ்ட் செய்து அதில் துளசி இலையை மசித்து சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து கூந்தலில் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி எடுக்கவும். இது பொடுகு தீவிரமாகாமல் தடுக்க உதவும்.
  • மூன்று டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை ஊறவைத்த வெந்த விதைகளை ப்ளெண்டர் உதவியுடன் கலக்கவும். பேஸ்டின் நிலைத்தன்மையை அடையும் வரை நன்றாக கலக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
  • நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சிகைக்காய் மூன்றையும் இரவில் தண்னீரில் ஊற வைத்து கலவையை காலையில் கொதிக்க விடவும். வெப்பத்தை அணைத்து கலவையை குளிர்வித்து அரைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.