கொரோனா பாதிப்பினால் பல கோடி ரூபா இழப்பை சந்தித்த போதிலும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கிய உலகப் புகழ்பெற்ற பிரபல ஆலயம்.!!

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் கிடைக்காமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால், 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.2000 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. ஒரு சிறிய அரசாங்கத்தைபோல் இங்கு பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன.அரசாங்கம் வரவு செலவுத்திட்டம் போடுவதை போல தேவஸ்தான நிர்வாகமும் வரவு செலவுத்திட்டத்தை வெளியிட்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பக்தர்கள் கோவிலில் செலுத்தும் காணிக்கை மூலமே கோவிலுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன.தேவஸ்தானத்தின் கீழ் 8 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 15 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் கோவில் மூடப்பட்டது. பக்தர்கள் தினமும் வந்தபோது அவர்கள் செலுத்தும் காணிக்கை தொகை குறைந்தது 2 கோடி ரூபாய் வரை இருக்கும்.மேலும், நகைகளும் அதிக அளவில் காணிக்கை செலுத்தப்பட்டன.இந்த நிலையில் கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் கிடைக்காமல் போனது. இதனால் 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.எனினும், கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படாமல் முழு அளவில் வழங்கப்படுகிறது என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.