யாரெல்லாம் எலுமிச்சையை தங்கள் உணவில் சேர்க்கக்கூடாது தெரியுமா? வாங்க பார்க்கலாம்

பழங்களில் வைட்டமின் சி அதிகம் கொண்ட ஓர் புளிப்புச் சுவைக் கொண்ட ஓர் பழம் தான் எலுமிச்சை. இப்பழத்தின் புளிப்புச் சுவையினால் இது பல்வேறு சாலட்டுகள் மற்றும் உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் 58 கிராம் எலுமிச்சையில் இருந்து உடலுக்கு 30 கிராம் வைட்டமின் சி கிடைக்கின்றன. மேலும் கை வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் எலுமிச்சையானது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படிப்பட்ட எலுமிச்சையில் என்ன தான் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், ஒருசிலருக்கு எலுமிச்சை மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆம், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் எலுமிச்சையை தங்களின் உணவில் சேர்க்கும் போது, அது தீங்கு விளைவிப்பதோடு மட்டுமின்றி, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை யாரெல்லாம் எலுமிச்சையை சாப்பிடக்கூடாது என்பதை இப்போது சொல்லவிருக்கிறது. அதைப் படித்து உங்களுக்கு அப்பிரச்சனை இருப்பின் எலுமிச்சையை உணவில் சேர்க்காதீர்கள்.

வயிற்றுப்புண்

அல்சர் அல்லது வயிற்றில் புண் இருப்பவர்கள், எக்காரணம் கொண்டும் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், வயிற்றில் உள்ள புண்ணை மேலும் பெரிதாக்கி, நிலைமையை மோசமாக்கிவிடும்.

பல் கூச்சம்

உங்களுக்கு பல் கூச்சம் இருந்தால், எலுமிச்சையை எடுக்காதீர்கள். ஏனென்றால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் எனாமலை சேதப்படுத்திவிடும். அதேப்போல் பற்களைத் துலக்கியதும் எலுமிச்சை நீரை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், அது பற்களை பலவீனமாக்கும்.

வாய்ப்புண்

வாய்ப்புண் இருப்பவர்கள் அமிலத்தன்மை அதிகம் கொண்ட எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது வாய்ப்புண்ணை பெரிதாக்குவதோடு, எரிச்சலையும் உண்டாக்கும். உங்களுக்கு வாய்ப்புண் விரைவில் குணமாக வேண்டுமானால், எலுமிச்சை உட்கொள்வதை நிறுத்துங்கள்.

நெஞ்செரிச்சல்/அசிடிட்டி

நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.

சென்சிடிவ் சருமத்தினர்

எலுமிச்சை சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை. ஆனால் எப்போதும் இதன் சாற்றினை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் பருக்களை உண்டாக்கும்.