பால் குடிப்பது ஆரோக்கியம் தான்… ஆனா இந்த உணவுகளை சாப்பிட்ட பின் குடிக்காதீங்க ஆபத்தாம்! வாங்க என்னவென்று பார்ப்போம்

பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஒரு பானமாக பால் உள்ளது. பாலில் ஏராளமான வைட்டமின்கள் , புரோட்டீன்கள் கனிமச் சத்துக்கள், கொழுப்புகள் அதிக அளவில் இருக்கிறது.

பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D உடலில் உள்ள எலும்பிற்கு மிகுந்த வலிமையும் , உறுதியும் தருகிறது. தினமும் பால் குடிப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சில உணவுகளை சாப்பிட்ட பின்னர் உடனே பால் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு , எலும்பிச்சை மற்றும் சாத்துக்குடி சாப்பிட்டு பின் பால் குடித்தால் அது நமக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுத்தும்.

பாகற்காய்

பாகற்காய் சாப்பிட்டபின் பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் அப்படி குடித்தால் முகத்தில் கருமையான புள்ளிகள் உண்டாகும்.

மீன்கள்

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது. அப்படி பால் குடிப்பதனால் நமக்கு செரிமான மண்டலம் பாதிப்படையும், சில சமயங்களில் மீன் சாப்பிட்டு உடனே பால் குடித்தால் அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளை புள்ளிகள் வர வாய்ப்புகள் உண்டு.

பெர்ரி பழம்

பெர்ரி பழங்களை சாப்பிட்ட பின் பால் குடித்தால் முகத்தில் பல சரும பிரச்சனைகள் உண்டாகும். அரிப்பு முகத்தில் சுருக்கங்கள் கூட வரலாம்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டதும் பால் குடித்தால் நம்முடைய முகத்தில் கரும்புள்ளிகள் வரக்கூடும்.