பொதுப் போக்குவரத்தில் நாளைய தினம் முதல் புதிய மாற்றம்..!

நாளைய தினம் தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் தொடரூந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த அனுமதிக்கமைய அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சி குறிப்பிட்டுள்ளது.