பாம்பனில் இருந்து இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல உதவிய நால்வருக்கு ஏற்பட்ட நிலை

தமிழ்நாட்டில் பாம்பனில் இருந்து இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல உதவிய கடத்தல்காரர்கள் 4 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் 3 பேர், இம்மாதம் 14லஆம் திகதி பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றனர். இதுதொடர்பாக இலங்கை காவல்துறையினர் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாம்பனில் கியூ பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில்,

அக்காள்மடத்தை சேர்ந்த எபிராஜ் 51, தேசிங்குராஜன் 46, சீமோன் பெரோசியஸ் 29, ஏசா 29, ஆகியோர் அகதிகளை படகில் ஏற்றி சென்றதும், இதற்காக ரூ. 80 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது.

இவர்களை கியூ பிரிவு காவல்துறை கைது செய்து, நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.