நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு: எரிபொருள் நிலையத்தில் குவிந்த மக்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகச் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று(15) காலை மன்னார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு   குவிந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பெற்றோல் மற்றும் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.