பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையைக் கடக்க முற்பட்ட மாணவிகள் மீது வாகனம் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய மாணவி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய மாணவிகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.