வாயை சுற்றி கருப்பா இருக்கா? இதோ அதனை போக்க அசத்தலான டிப்ஸ்

சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும்.

ஆனால் எவ்வளவு தான் முகத்தை பராமரித்தாலும் வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகமாவதால் ஏற்படுகிறது.

இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் இது தற்காலிகமாக தான்.

இந்த கருமை நிறத்தை இயற்க்கை முறையில் போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

  • இரண்டு டீஸ்பூன் கடலை மாவில் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து வேண்டிய அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கி இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு சாதாரணமான தண்ணீரில் கழுவவும். தினமும் இதை செய்து வந்தால் உதடு கருமை நீங்கும்.
  • உருளைக்கிழங்கு எடுத்து மண் போக கழுவி அதிலிருந்து துருவி, பிழிந்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை வாயில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.உருளைக்கிழங்கு எடுத்து மண் போக கழுவி அதிலிருந்து துருவி, பிழிந்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை வாயில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • எலுமிச்சையை எடுத்து சாறு பிழிந்து அதே அளவு தேன் சேர்த்து இரண்டையும் கலக்கவும். இந்த கலவையை உதட்டின் நிறம் கருமையாக இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு பிறகு வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.
  • க்ளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்ஐயும் சம அளவு எடுத்து கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை கழுவி எடுக்கவும்.
  • 1 டீஸ்பூன் ஓட்ஸ் எடுத்து அரைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கருமையான படலங்கள் இருக்கும் வாய் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும் பிறகு முகத்தை இலேசாக ஈரம் செய்து மெதுவாக தேய்க்கவும். வாரம் இரண்டு முறை செய்துவந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
  •  பட்டாணியை கழுவி காயவைத்து பொடியாக அரைக்கவும். இந்த தூளை 1 அல்லது 2 டீஸ்பூன் எடுத்து சிறிது பாலுடன் கலந்து பேஸ்ட் போன்று குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடங்கள் பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.