மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

செவனகல, வலவேகம பிரதேசத்தில் இளம் மனைவியை கணவர் ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இரவு மனைவியின் கழுத்தை வயர் ஒன்றினால் நெரித்து கொலை செய்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவனகல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அமிலா ஹர்ஷனி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், தனது கணவர் மற்றும் அயலவர்களுடன் அடிக்கடி பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வார் என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் சந்தேக நபர் தனது தந்தையை தாக்கியமையினால் விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினமே பிணையில் விடுதலையாகியுள்ளார்.

விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பியவர், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு மனைவியை கட்டிலில் வைத்து வயர் ஒன்றினால் கட்டி வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து மீண்டும் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.