கைகலப்பொன்றை தடுக்க சென்ற நபருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா – போகஸ்வெவ பகுதியில் இருதரப்பினருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பினை தடுக்க சென்ற நபர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று மாலை இருதரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அதனை தடுக்கச் சென்ற 29 வயதான நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.