இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா! நோயாளிகளின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு..!!

இலங்கையில் மேலும் 10 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இன்றைய நாளில் மட்டும் 20 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாம் இணைப்பு:இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு:இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு நோயாளர்கள் முழுமையாகாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரை 129 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 111 கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், நாட்டின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.