முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள்.

இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்தவர்களின் பின்பக்கமா வந்த மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது உந்துருளி தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த மூங்கிலாற்று பகுதியினை சேர்ந்த இராஜேந்திரம், லிங்கம் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.