யாழ்ப்பாணத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

யாழ்ப்பாணத்தில் ( யாழ் வைத்தியசாலை – கொமர்ஷல் வங்கிக்கு அருகாமையில்) மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக நீரிழிவு தினத்தையும் இன்கலினைக் கண்டுபிடித்த நூற்றாண்டையும் முன்னிட்டு யாழ். STS வைத்தியசாலை, யாழ். நீரிழிவுக் கழகம், வட பிராந்திய லயன் களகங்கள் (306B1) இணைந்து நடாத்தும் இந்த மருத்துவ முகாம், நாளை(14) காலை 09.00 மணி தொடக்கம் 03.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி ஆரம்பித்து வைக்கும் இம் மருத்துவ முகாமில், அனைவரையும் கலந்துகொண்டு பயனடையுமாறு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

மருத்துவ முகாமில் நடாத்தப்படும் பரிசோதனைகள் குறித்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது,