ஆப்கானிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு: மூவர் பலி!

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மசூதியின் உள்பகுதியில் வெடி குண்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிவிபத்தில் குடியிருப்பாளர்களும், தலிபான் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தலீபான்களுடன் சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.