கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04,05,06,07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும், கோட்டே மற்றும் கடுவலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.