இளம் வயதிலேயே இலங்கை நீதிபதியான யாழ் இளைஞன்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான ரஞ்சித்குமார் அவர்கள் மிக இளம் வயதிலேயே இலங்கையில் நீதிபதியாக தெரிவாகியுள்ளார்.

அதோடு அவர் சட்டத்தரணியாக மட்டுமன்றி பல்வேறுபட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நீதிக்காக முழங்கிய ஒரு இளைஞர் ஆவார்.

இந்நிலையில்  ரஞ்சித்குமார் மிகவும் இளவயதில் நீதிபதியாவது தமிழ்ச்சமூகம் காணும் பெருமைமிகு சந்தர்ப்பமாகும்.

மேலும்  மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ் மண்ணின் மைந்தனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.