நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்போருக்கு புதிய சிக்கல்!

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை திறந்து வைக்கும் போது சுகாதார அமைச்சர் இதனை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும்.

அதற்கமைய, இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.