பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்தேகநபர் வர்த்த நிலையமொன்றுக்கு சென்றுவந்துள்ளமை அங்கிருந்த சீ.சீ.ரி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள்- 071- 8591762 071- 8594921 071- 8594913