கடும் மழையுடனான காலநிலை குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தென், மேல் மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும், அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிக பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.