இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

கினிகத்தேனை- பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் இங்கிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய விஜயகுமார் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து மாத்தளை நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருத்தப்பணி பஸ்ஸும் நாவலப்பிட்டியிலிருந்து பிலியந்தலை பகுதிக்கு சென்ற கனரக லொறியொன்றுமே பகத்துல பாலத்தில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமுற்ற லொறியின் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.