காலமானார் யாழ். எம்.ஜி.ஆர்

யாழ். எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனாவார்.

அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கறுத்த கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் அவரை, பலரும் ‘யாழ்ப்பாண எம்.ஜி.ஆர்’ என்றே அழைத்தனர்.

எம்.ஜி.ஆரின் பிறந்த தினம், நினைவு நாள்களில், தன்னால் முடிந்தளவுக்கு தனது சொந்த நிதியில், வறியவர்களுக்கு உதவிகளை செய்வார். இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு பல்லரும் இரங்கலை கூறிவருகின்றனர்.

அத்துடன், எம்.ஜி.ஆர் மீதுகொண்ட அதீத ஈடுபாட்டால் யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு சந்தை பகுதியில், எம்.ஜி ஆருக்கு சிலை ஒன்றினையும் அவர் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.