சீரற்ற காலநிலை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொல்கொல்ல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.