சீரான திட்டமிடலின்றி மீண்டும் திறக்கப்பட்ட நாடு…கொரோனா இரண்டு மடங்காக பரவுமென எச்சரிக்கை..!!

எந்தவொரு திட்டமிடலையும் முன் வைக்காத நிலையில் நாட்டை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உரிய முறையில் திட்டமிடாமல் நாட்டை திறப்பதன் மூலம் பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டு மடங்காக பரவ கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பொரளையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.