பிரான்ஸில் யாழ் பெண் மீது கணவர் கொடூர தாக்குதல்!

குடும்பத்தகராறு காரணமாக யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச் சம்பவம் பிரான்ஸ் பொன்டி எனும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்கும் தாயாரான 37 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஞாயிறு இடம்பெற்ற இச் சம்பவத்தில் கண்கள் மற்றும் வாயில் கடும் காயங்களுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் குறித்த பெண் யாழ் பல்கலைக்கழக வர்த்தகத்துறையில் கல்வி கற்ற நிலையில் , கல்வியை இடை நடுவில் கைவிட்டுவிட்டு கடந்த 2006ம் ஆண்டளவில் திருமணம் முடித்து பிரான்ஸ் சென்று கணவருடன் வசித்து வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.