வவுனியா மக்களுக்கு விடுவிக்கப்பட்ட விசேட அறிவிப்பு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை குறித்த மின்தடை ஏற்படவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.